மண்சரிவு அபாயம் காரணமாக ஏழு குடும்பங்களை இடம்பெயருமாறு அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொகவந்தலாவ - தெரேசியா தோட்டத்தில் முதலாம் இலக்க தொடர் லயன்குடியிருப்பிற்கு அருகில் உள்ள மண்மேடு நேற்று கற்பாறையுடன் சரிந்து விழுந்தமையால் குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த தோட்ட லயன் குடியிருப்பில் வசித்து வந்த ஏழு குடும்பங்களை சேர்ந்த 56 பேரை இடம்பெயருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ சென்மரிஸ் மத்திய கல்லூரியின் ஆறு வகுப்பறைகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

பாடசாலைக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்று பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் ஆறாம் தர வகுப்பறைகள் நான்கும், உயர்தரத்தின் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவு வகுப்பறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை இன்றைய தினம் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

Latest Offers