மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச உளநல தின பேரணி

Report Print Kumar in சமூகம்

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று பேரணியொன்று நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாறிவரும் உலகில் இளைஞர்களுக்கான உளநலம் எனும் தலைப்பில் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு - கோட்டைமுனை சந்தியில் இருந்து காந்திபூங்கா வரையில் இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நடைபவனியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் ரி.கடம்பநாதன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உளநல மேம்பாட்டுக்காக செயற்படும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா

வவுனியா பொது வைத்திசாலை உளநலப் பிரிவினதும் மாவட்டச் செயலகத்தினதும் இணை ஏற்பாட்டில் இன்று உளநல தின நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் உலநலத்தை பேணும் முகமாக வாழும் கலைப் பயிற்சியின் பேராசிரியர்மனநலக்கலை நிபுனர் க.கமேலேந்திரன் விசேட பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

அதேபோன்று தற்கொலையைத் தடுக்கும் விழிப்புணர்வு கருத்தாடல், மதுபாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தாடல் என பல விழிப்புணர்வு தெளிவுபடுத்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.