சுத்தம் செய்யப்பட்டது முள்ளிவாய்க்கால் கடற்கரை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - புதுமாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி வரையிலான கடற்கரையை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

681ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்று குறித்த சுத்தம் செய்யும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதில் சுமார் 480 இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகிறது.

இதன்போது கடல் மிதப்பிகள், உக்கும் மற்றும் உக்காத கழிவுப்பொருட்கள் என்பன கடற்கரை பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.