வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனே காலை 8.30 மணியளவில் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாடே சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணம் என இதன்போது உறவினர்கள், வைத்தியர்களுடன் முரண்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவத்தில் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

வவுனியா, கற்குழியைச் சேர்ந்த எஸ்.டிலக்சன் என்ற ஏழு வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மரண விசாரணை அறிக்கையின் பின்னரே சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.