வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இவர் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவரின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுகந்தன் எனத் தெரியவருகின்றது.

நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு சென்ற வேளை காணாமற்போயுள்ளதாக உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers