இலங்கையில் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இலங்கை பெண்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் குருவிட்டகே விடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது சமூக இணையத்தளங்களில் வைரலாகி வரும் #Stronggorgeouswoman தொடர்பான எச்சரிக்கையாகவே இது காணப்படுகிறது.

அதன்படி, பெண்கள் தமது புகைப்படங்களை பதிவிட கூடியதான #Stronggorgeouswoman தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

இதனை இலங்கை பெண்கள் அதிலும் குறிப்பாக முகப்புத்தகங்களை பயன்படுத்தும் பெண்கள் உபயோகப்படுத்துகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இதில் பதிவிடப்படும் பெண்களின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படலாம் என குறித்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெண்கள் கூடுதலான அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ரஜீவ் குருவிட்டகே அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.