கொழும்பிலிருந்து புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி புகையிரதத்தில் பயணித்த இளைஞரொருவர் புகையிரதத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் திருகோணமலை - இறக்கக்கண்டி பகுதியை சேர்ந்த முகம்மது முபீஸ் (21 வயது) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது 21ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுவதற்காக அந்த இளைஞர் கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு பயணித்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers