மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் ஜேர்மன் துணைத் தூதுவருக்கு இடையில் சந்திப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதரகத்தின் துணை தூதுவர் அன்றீஸ் பேர்க் (ANDREAS BEAG) ஆகியோருக்கு இடையில் இன்று காலை மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது ஜேர்மன் நாட்டு தூதரகத்தின் வர்த்தக மற்றும் அரசியல், பொருளாதார ஆலோசகர் தர்னி தலுவத்த (DHARINI DALUWATTE) கலந்து கொண்டதோடு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.