தௌஹித் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Kumar in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹித் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேருக்கு விளக்கமறியல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று இவர்களை முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹித் ஜமாத் தலைமையகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.