தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த சிலர் திகாம்பரத்துடன் இணைவு

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணியில் இன்று இணைந்து கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவும் மலையக மக்களுக்கு அமைச்சர் திகாம்பரம் செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு உதவும் தாம் தொழிலாளர் தேசிய முன்னணியில் இணைந்து கொண்டதாக இணைந்தவர்கள் கூறியுள்ளனர்.

எம்.மலர்வாசகம், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.வீராசாமி உள்ளிட்டோர் மலையக அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் திகாம்பரத்தை சந்தித்து கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

Latest Offers