இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

Report Print Sumi in சமூகம்

இலங்கை, நெடுந்தீவு கடற்பரப்புக்குள் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து நாட்டு படகுகள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Latest Offers