கிண்ணியாவில் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபருக்கு விளக்க மறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் 550 கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் குறித்தநபரை இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா, குட்டிக்கரைச்சி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் கேரளா கஞ்சாவினை விற்பனை செய்து வருவதாக கிண்ணியா போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே 550 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Latest Offers