முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல்

Report Print Yathu in சமூகம்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அமைந்ததுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சல் த.குருகுலராஜா, பசுபதிப்பின்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வில் நினைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சமகால அரசியல் நிலை தொடர்பிலும், கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.