யாழ். பல்கலையில் மூன்று மாத கற்கை நெறிக்கு விவசாயிகள் தெரிவு

Report Print Ajith Ajith in சமூகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பண்ணை உபகரண முகாமைத்துவம் சம்பந்தமான மூன்று மாத கற்கை நெறியை மேற்கொள்வதற்காக 30 விவசாயிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு ஆளுநர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயப்பீடத்தில் இடம்பெற்றது.

இந்த பாடநெறியில் பண்ணை உபகரணங்களை பயன்படுத்தும் விதம், அவற்றை செயற்படுத்தும் அறிவு போன்றவை அடங்கியுள்ளன.

இந்த பயிற்சி நெறி யாழ்ப்பாண சமூகத்துக்கும் யாழ்ப்பாண விவசாயிகளுக்கும் முக்கியமாக மைல்கல் என்று ஆளுநர் சுரேன் ராகவன் நேற்றைய நிகழ்வின்போது தெரிவித்தார்.

உணவுப்பாதுகாப்பை சமூகத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்த பாடநெறி உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.