மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ரயில் யானை கூட்டத்துடன் மோதி விபத்து!

Report Print Murali Murali in சமூகம்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், வெலிகந்த பகுதியை அண்மித்த பிரதேசத்தில் காட்டு யானைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், யானைகள் கூட்டத்தின் மீது மோதுண்ட ரயில் தடம்புரண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் இயந்திரத்தில் மோதுண்ட ஒரு யானை எஞ்ஜினில் சிக்குண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் மேலும் பல யானைகள் காயமடைந்துள்ளதுடன், அவை காட்டிற்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இயந்திர பகுதியில் சிக்குண்டுள்ள யானையை அப்புறப்படுத்தி, ரயிலை தண்டவாளத்துடன் இணைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.