கட்டுப்பாட்டையிழந்த வாகன‌ சாரதிக்கு ஏற்பட்ட விபரீதம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் இலுப்பைகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளாகியது.

இதன்போது விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று‌ வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பட்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த கந்தையா உதயகுமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers