வெளிநாட்டிலிருந்து வந்த நபர் கொழும்பிலுள்ள ஹோட்டலில் மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள பிரபல ஹோட்டலின் 33 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 52 வயதான அவுஸ்திரேலிய நாட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த மரணத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers

loading...