வவுனியாவில் வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி

Report Print Theesan in சமூகம்

வீதிப்பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்றைய தினம் வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நடைபவனியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமாகி கண்டி வீதி வழியாக வவுனியா நகரசபை வரையில் சென்றுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடமாகாண வீதி பாதுகாப்பு வாரமானது எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.