மூன்று துருக்கி பிரஜைகள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்த மூன்று துருக்கிய பிரஜைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

துருக்கி நாட்டை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று கொஹூவலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர்கள் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.