சஜித்தின் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்புவதற்காக பேருந்தில் பயணித்த குறித்தநபர் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவர் அதிக மதுபோதையில் இருந்தமையே உயிரிழப்பிற்கு காரணமென தெரிவிக்கப்படுவதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் திருகோணமலை, சேருவில தொகுதி முன்னாள் அமைப்பாளர் அருண் சிறிசேனவின் தலைமையில் சென்ற குழுவினரில் ஒருவர் என தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers