முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவில் வீதிப் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் இருந்து இன்று இந்த நடைபவனி ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இதில் பாடசாலை மாணவர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடக்கு மாகாண வீதி பாதுகாப்பு வாரமானது எதிர்வரும் 13ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.