வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு விழா

Report Print Theesan in சமூகம்

வடக்கு மாகாணப் பண்பாட்டுப் பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றுள்ளது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வடமாகாணத்தில் இருக்கும் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகம் போன்றவற்றில் வருடாந்தம் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் நோக்குடன் இப் பண்பாட்டுப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உதவிப் பணிப்பாளர் சுஜீபா சிவதாஸ், முன்னாள் துணைவேந்தர் யாழ்.பல்கலைக்கழகம் நா.சண்முகலிங்கம், கலைஞர் வேல் ஆனந்தன், ஓய்வு நிலை சிரேஸ்ட விரிவுரையாளர் மு. கௌரிகாந்தன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.