எரிபொருட்களின் விலையில் மாற்றம்

Report Print Ajith Ajith in சமூகம்

இந்திய எரிபொருள் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் மற்றும் எக்ஸ்ட்ரா பிரீமியம் யூரோ 3 பெற்றோல் ஆகியன லீற்றர் ஒன்றுக்கு 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி அதன் புதிய விலை 142ரூபாவாகும். இதேவேளை எக்ஸ்ட்ரா பிரீமியம் 95 பெற்றோல் 164 ரூபாவுக்கு விற்பனையாகும்.

மண்ணெண்ணெய் தொடர்ந்தும் 70 ரூபாவுக்கே விற்பனையாகும். டீசல் விலைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.