கோயிலுக்கு அருகில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட நபர்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கண்டி - கலஹா பொலிஸ் பிரிவின் பவ்லான தோட்டத்தில் கோயில் ஒன்றுக்கு அருகில் கிணறு தோண்டும் போர்வையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தின் சூழவுள்ள பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் பல நாட்களாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களுடன் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.