அம்பாறையில் சங்குகளுடன் இருவர் கைது

Report Print Varunan in சமூகம்

அம்பாறையில் வலம்புரி சங்கு மற்றும் 5 கௌரி சங்குகளை தம்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை - சாய்ந்தமருது, மாளிகைக்காடுப் பகுதியில் வைத்து நேற்று மாலை பொதி ஒன்றுடன் குறித்த இருவரை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 625 கிராம் வலம்புரி சங்கு, 1.235 கிராம், 1.505 கிராம், 675 கிராம், 515 கிராம் மற்றும் 1.190 கிராம் நிறையுடைய கௌரி சங்குகள் மற்றும் போலி நாணயத்தாள்களை கண்டறியும் கருவி என்பன மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சாய்ந்தமருதைச் சேர்ந்த 52 வயதுடைய ஆதம்பாவா மற்றும் 43 வயதுடைய கந்தவனம் ஜீவரத்னம் எனத் தெரியவருகின்றது.