கால் இல்லையென்பதால் அவமானமாக எண்ணும் உறவுகள்! போராடும் முன்னாள் பெண் போராளி

Report Print Kanmani in சமூகம்

நாட்டிற்காக யுத்த களத்தில் போராடி உயிர் பிளைத்த போராளிகள் எண்ணவோ இன்றும் தனது வாழ் நாளை கழிப்பதற்காக தினந்தோறும் போராட்டக்களத்தில் போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அந்தவகையில், கிளிநொச்சி - தர்மபுரத்தில் வசிக்கும் பெண் போராளியான கிருஸ்ணபிள்ளை பரமேஸ்வரி உறவுகள் அனைத்தும் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த வேளை உணவிற்காக பெரும் துயரத்திற்கு மத்தியில் போராடிக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்.

தனக்கு கால்கள் இல்லாத காரணத்தால் உறவுகள் அனைத்தும் தன்னை ஏறெடுத்து கூட பார்க்காமல் தனிமையில் கைவிட்டு சென்றுவிட்டனர் என கண்ணீருடன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363