சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர்கள் இருவர் பிணையில் செல்ல அனுமதி

Report Print Ajith Ajith in சமூகம்

சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெகத் பிரேம்லால் விஜேவீர மற்றும் உதவிப்பணிப்பாளர் தாரக செனவிரட்ன ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிவானால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவருக்கும் 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 5 மில்லியன் ரூபா சரீரப்பிணையிலேயே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுங்க நடைமுறைகளை மீறி அரசுடைமையாக்கப்பட்ட தங்கங்களை வெளியில் எடுத்துச்செல்ல உதவிய குற்றச்சாட்டே இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.