தந்தை உயிரிழந்த போது தொலைகாட்சியில் பாடல் கேட்ட மகனால் சர்ச்சை

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையில் தந்தை உயிரிழந்த போது தொலைகாட்சியில் பாடல் கேட்டு மகிழ்ந்த மகன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

தொலைகாட்சியில் இடம்பெற்ற பாடல் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பேற்படுத்திய இளைஞன் ஒருவர் பாடல் ஒன்று வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதன்போது வீட்டில் துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கூறினார். துயர சம்பவம் குறித்து அறிவிப்பாளர் கேட்ட போது, தந்தை காலை உயிரிழந்து விட்டார் என இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞனின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைத்த அறிவிப்பாளர், தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இதன் போது, குறித்த இளைஞன் அடுத்த பாடலுக்காக தனது நண்பர்கள் குழுவினரை இணைத்து கொள்வதாக கூறி அழைப்பை துண்டித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் இளைஞனை பலரும் விமர்சித்துள்ளனர்.