முன்னாள் போராளிகளை சந்தித்த பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்

Report Print Theesan in சமூகம்

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கட்சியின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வடகிழக்கு பகுதியில் தேர்தல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அந்த வகையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கும் முன்னாள் போராளிகள் மற்றும் பிரதேச மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று வவுனியா நெடுங்கேணி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது பிரதேச மக்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேட்டறிந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, முன்னாள் சிங்கள பிரதேச சபை உப தவிசாளர் வசந்த ராஜ கருணா, பொதுஜன பெரமுன, பொதுஜன பெரமுனவின் தமிழ் மக்கள் இணைப்பாளர் பிரேம், கட்சியின் செயற்பாட்டாளர் ஜனகநந்தகுமார, மற்றும் போராளிகள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.