வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பெண்களுக்கு சஜித் வழங்கிய உறுதிமொழி

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாடுகளில் பணி செய்யும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.

இதற்காக அந்தந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

லக்கல நகரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இலங்கை பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் பணி செய்து வருகின்றார்கள்.

இலங்கை பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். இதனால் அந்த நாடுகள் எவ்வளவு பலமானதாக இருந்தாலும் அவற்றுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

அது மாத்திரமின்றி அவர்களின் பாதுகாப்பிற்கும், சித்திரவதைகள் இன்றி பணி செய்வதற்கும் வழி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.