தொடர்ந்தும் நீரில் மூழ்கும் யாழ்ப்பாணம் விமான நிலையம்! நீடிக்கும் சர்ச்சை

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்தும் வெள்ள நீரில் மூழ்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பூரண கண்கானிப்பின் கீழ் வேகமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதற்காக 2250 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 1950 மில்லியன் ரூபாய் பணம் இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

மக்களின் தேவைக்காக விரைவாக நிர்மாணிக்கப்பட்ட இந்த விமான நிலையம் தொடர்ந்தும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றது.

விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை உடன் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை

இதனால் இந்த குறைபாடுகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான எந்தவொரு தகுதிகளையும் கொண்டிருக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers