8 வருடங்களின் பின்னர் இணையத்தில் பிரபலமாகும் கோத்தபாயவின் மகன்

Report Print Vethu Vethu in சமூகம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் மகன் திருமண பந்தத்தில் இணைந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

திருமணம் நடைபெற்று 8 வருடங்களின் பின்னர் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், கோத்தபாயவின் மகன் பிரபல்யம் அடைந்துள்ளார்.

அமெரிக்காவின் வசிக்கும் தமிந்த மனோஜ் ராஜபக்சவுக்கு தற்போது 37 வயதாகின்றது. அமெரிக்காவில் உயர் பாடசாலைகளில் கல்வி கற்றவர் அங்கேயே தொழில் செய்து வருகின்றார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் கோத்தபாய ராஜபக்சவின் மகனின் திருமண வைபவம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வந்து அவரது மகன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உறவுக்கார பெண் ஒருவரையே மனோஜ் திருமணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ராஜபக்ஷர்களின் ஆதரவாளர்கள் இந்தப் புகைப்படங்களை இணையத்தில் பிரபல்யப்படுத்தி வருகின்றனர்.