கொழும்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் - நள்ளிரவில் நடந்த பயங்கரம்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பகுதியில் இளைஞன் ஒருவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டிய தனியார் கல்வி நிறுவனத்திற்கு முன்னால் வைத்து. இன்று அதிகாலை 12.20 மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 18 வயதுடைய பன்னிப்பிட்டிய தெப்பானம, பொரளை வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் இன்னமும் தெரியாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.