காட்டு யானைகளின் நடமாட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இராஜபுரம் கிராம மக்கள்

Report Print Nesan Nesan in சமூகம்

செங்கலடி, இராஜபுரம் கிராமத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் நடமாட்டம் காரணமாக குறித்த பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு, செங்கலடி - மரப்பாலம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட இராஜபுரம் கிராமத்தில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக மக்களின் குடிமனை பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் புகுந்து தோட்டப் பயிர்களையும் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

குறித்த கிராமத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறி வாழ்ந்து வரும் மக்கள் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் யானைகளின் அட்டகாசத்தால் வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கைகள் அழிவடைவதால் தாம் மிகவும் சிக்கலுக்கு உள்ளாவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.