உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க யோசனை

Report Print Ajith Ajith in சமூகம்

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 11 முதல் 15 வரையில் அதிகரிக்கும் யோசனை ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழல்களுக்கு எதிரான நாடாளுமன்றக் குழு இந்த யோசனையை ஆராய்ந்து வருகிறதாக தெரியவருகிறது.

நாட்டில் பெருகிவரும் குற்றங்கள் மற்றும் வழக்குகளுக்கு ஏற்ப நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படடுள்ளது.

கடந்த 8 மாதங்களில் மாத்திரம் லஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பில் 7800 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்துக்குள் இது 1000 ஆக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.