அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்கள் உட்பட பலர் கைது!

Report Print Vethu Vethu in சமூகம்

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம், சுதுவெல்ல பிரதேசத்தில் நடத்தி செல்லப்படும் ஹோட்டல் ஒன்றிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களில் 11 பேர் ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், பளை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு பிதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர் ஹோட்டலில் தங்கியிருப்பதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய இவர்கள் கைது செய்யபப்பட்டுள்ளர்.

கடந்த 22ஆம் திகதி மாலை இந்த விடுதிக்கு வந்து தங்கியிருந்த நிலையில் அவர்களது உடமைகளையும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

முகவர் ஊடாக சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்காக அங்கு தங்கியிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிவத்துள்ளனர்.