இலங்கை கடற்தொழிலாளர்களை விடுவிக்கும் இந்தியா

Report Print Ajith Ajith in சமூகம்

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமான வகையில் தமது கடற்பகுதிக்குள் பிரவேசித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் 18 பேரை விடுதலை செய்ய இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.

இலங்கையின் தென்பகுதியை சேர்ந்த 6 பேர் உட்பட்ட 24 கடற்றொழிலாளர்கள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர்.

குறித்த கடற்தொழிலாளர்களில் 18 பேர் வடக்கை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்டுகின்றது.

தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு இவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.

எனினும் அவர்களின் படகுகள் இந்திய அரசாங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.