நாடெங்கிலும் களைகட்டும் தீபாவளிப் பண்டிகை வியாபாரம்

Report Print Thileepan Thileepan in சமூகம்
86Shares

வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை இந்து மக்களினால் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுவதோடு, தீபாவளி பண்டிகையானது தீப ஒளித்திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.

அந்தவகையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நாடெங்கிலும் வியாபாரம் களைகட்டியுள்ளது.

வவுனியா நகரின் மத்திய பகுதியிலும் புத்தாடைகள் கொள்வனவு சுடுபிடித்துள்ளதுடன், போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - ஹொறவ்பொத்தான வீதியின் இருமருங்கிலும் வியாபாரம் மேற்கொண்டு வரும் நடைபாதை வியாபாரிகள் தற்காலிக பந்தல் அமைத்து வியாபாரம் மேற்கொள்வதற்கு வவுனியா நகரசபையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு தற்காலிகமாக கொட்டகை அமைப்பதற்கு அனுமதி வழங்கபட்டுள்ளதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 28ஆம் திகதிக்கு பின்னர் குறித்த பகுதிகளில் நடைபாதை வியாபாரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்படவுள்ளது.

மாறாக வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அவர்கள் வியாபாரம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்முனை

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வரத்தக நிலையங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ஆடைகள் மற்றும் பொருள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதினை காணக்கூடியதாக உள்ளது.