50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் எரித்தழிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் அமைந்துள்ள நன்னீர் மீன்பிடி குளங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட வலைகள் நீதிமன்றின் உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா விரிவாக்கல் காரியாலயத்தினால் இவ்வருடத்தில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றபட்ட சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கூசி மற்றும் முக்கூட்டு வலைகளே வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்றையதினம் எரித்தழிக்கப்பட்டன.

குறித்த எரிப்பு நடவடிக்கையின் போது வவுனியா உதவிமாவட்ட செயலாளர் ந.கமலதாஸ், நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் பொறுப்பதிகாரி யோ.நிசாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.