சாய்ந்தமருது நகர சபையாக தரமுயர்த்தப்படும்: மஹிந்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in சமூகம்
75Shares

சாய்ந்தமருது மக்களுக்காக இந்த பிரதேசத்தை நகர சபையாக தரம் உயர்த்தி தரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கல்முனை நகரை புதிய நகரமாக மாற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டு மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியதாகவும் அதற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.