புதுக்குடியிருப்பில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மூவர் வைத்தியசாலையில்!

Report Print Mohan Mohan in சமூகம்

குளவிகொட்டுக்கு இலக்காகி முவர் இன்று மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் பகுதியில் வயல் வேலைக்கு சென்றவர்கள் நேற்று குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இவ்வாறு குளவித் தாக்குதலுக்கு இலக்காகிய ஏழு பேர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக இன்று மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அண்மையில் சுதந்திரபுரம் பகுதியில் குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.