வவுனியாவில் உள்ள உணவகமொன்றிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதர்களினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா - மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள சைவ உணவகத்தில் நிலவிய சீர்கேடு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த உணவகத்தில் பொதுமகன் ஒருவருக்கு வழங்கப்பட்ட இடியாப்பம் கொத்தில் ஈ காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்நபர் குறித்த உணவை பரிமாறிய ஊழியரிடம் இவ்விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.

இதன்போது உணவை மீள பெற்றுக்கொண்ட குறித்த ஊழியர் ஈயை தூக்கி வீசி விட்டு மீண்டும் அதே உணவை அந்நபருக்கு வழங்கியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா சுகாதார திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளதையடுத்து, உணவகத்திற்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன், பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

சுகாதார சீர்கேடு நிலவுவதாக தெரிவித்து உணவத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதர்களினால் நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வழக்கு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இம்மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.