அகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தேர்தல் புறக்கணிப்பு

Report Print Kumar in சமூகம்

தமது கோரிக்கைகளை இரண்டு பிரதான வேட்பாளர்களும் புறக்கணிப்பாளர்களானால் தாங்கள் அகில இலங்கை ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தேர்தலை புறக்கணிக்கும் நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு விடுத்த அழைப்பின் ஊடக சந்திப்பொன்று இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரும் பதில் வழங்கவில்லையெனவும், இது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் பட்டதாரிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற வகையில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கையெடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கையினை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.