மலேசியா: கணவன்- மனைவி மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

மலேசியாவைச் சேர்ந்த கணவன்- மனைவி மீது மியான்மரிலிருந்து 20 சட்டவிரோத குடியேறிகளை மலேசியாவுக்கு கடத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

மஹூசின் சுலைமான் மற்றும் மபூஜா இசா இருவர் மீதும் ஆட்கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் KOTA BHARU பகுதி அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு அபராதம் மற்றும 15 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.

இதே போல், அதே நீதிமன்றத்தில் பேருந்து ஓட்டுநர் ஹூசைன் என்றவர் மீது 6 மியான்மரிகளை ஏற்றுவந்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் அந்த மியான்மரிகளிடம் உள்ளதா என்பதை உறுதி செய்யாமல் அழைத்து வந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர் சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய் வரை (2.5 லட்சம் மலேசிய ரிங்கட்) அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையுமே அனுபவிக்க நேரிடும்.

இரு வழக்குகளிலும் பிணை மறுக்கப்பட்ட நிலையில், நவம்பர் 21 அன்று விசாரணை நடக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் மலிவான சம்பளத்துக்கு வேலை செய்ய ஆட்கள் தேவை அதிகரித்துள்ளதால், இடைத்தரகர்கள் அருகாமையில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை குறிவைத்து ஆட்கடத்தல் செயலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகின்றது.