திருகோணமலையில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் நேற்றிரவு உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்தநபர் தமது வீட்டில் துப்பாக்கியை வைத்துள்ளதுடன், மிருக வேட்டையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதையடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட போது துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், குறித்தநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் பாலம் போட்டாறு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய மகிந்தன் சிந்துஜன் என தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவர் தொடர்பில் முன் குற்றங்கள் இருக்கின்றதா எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.