விழித்துக்கொள் தேசமே! சுர்ஜித் தொடர்பில் பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்டுள்ள கருத்து

Report Print Malar in சமூகம்

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு மூன்றாவது நாளாகவும் இன்று மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

அந்தவகையில் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள சுர்ஜித் குறித்து பல்வேறு பகுதியிலும் உள்ள மக்கள் தமது பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் சுர்ஜித் குறித்து கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நிலவில் நீர், செவ்வாயில் குடியிருப்பு, எதற்காக இத்தனைக் கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு? என அவர் குறிப்பிட்டுள்ளார்.