வவுனியாவில் பீல்ட் பைக்கிளில் ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டியப்பகுதிகளில் இன்று காலை முதல் விசேட அதிரடிப்படையினர் 6 பீல்ட் பைக் மோட்டர் சைக்கிளில்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், அவ்வப்போது பீல்ட் பைக்கை நிறுத்தி சில பகுதிகளில் காவல் கடமைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி தினமான இன்று விசேட அதிரடிப்படையினரின் இத்தகைய செயற்பாட்டால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலையும் ஏற்பட்டிருந்தது.