முள்ளிவாய்க்கால் மேற்குபகுதியில் உருகுலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் சென்றவாரத்திற்கு முன்னர் தொடக்கம் கிளிநொச்சியில் உறவினர் வீட்டொன்றில் தங்கியிருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
இந்நிலையில் யாருமில்லாத வீட்டில் குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்று மலசலகூடத்திற்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.