தெற்கில் கடல் கொந்தளிப்பு! இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

Report Print Gokulan Gokulan in சமூகம்
63Shares

காலி - கொழும்பு பிரதான வீதியில் தெல்வத்த கஹவ பகுதியில் இன்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக கஹவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கடல் கொந்தளிப்பின் காரணமாக கடல் நீர் காலி - கொழும்பு பிரதான வீதியை தாண்டி நிலப்பகுதிக்கு வந்துள்ளது. அதோடு கடல் மணல் பிரதான விதியின் குறுக்கே கரை சேர்ந்ததால் அப்பகுதியில் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டின் தென்கிழக்கு பகுதியை அண்மித்த வான்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்று இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி வடக்கு,வடமத்திய,ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சுமார் 150 மில்லிமீட்டர் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீட்டர் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.