நானுஓயா பகுதியில் நோயாளர்காவு வண்டி விபத்து: இருவர் காயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
89Shares

நானுஓயா, பங்களாஅத்த பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

டயகம வைத்தியசாலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோயாளர்காவு வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினால் சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான நோயாளர்காவு வண்டியின் சாரதியும், உதவியாளரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.